புதன்கிழமை, நவம்பர் 6, 2024

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர உள்ள 5 படங்கள்.. தியேட்டரை இழுத்து மூட வச்சிடுவாங்க போல

ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று தான். ஆனால் தற்போது நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. ஏற்கனவே ஓராண்டிற்கும் மேலாக ஊரடங்கில் காலம் கடத்தி தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். ஆனால் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனை தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரும் பல படங்கள் ஓடிடியில் தான் வெளியானது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கலாம்.

அதன்படி முதலில் இசையமைப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்துள்ள ஹப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு படம் நாளை வெளியாக உள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள அன்பறிவு படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருப்பதோடு அவரே இந்த படத்தின் கதையையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் படம் தோல்வி அடைந்த நிலையில், அன்பறிவு படம் எப்படி இருக்கும் என்பது படம் வெளியானால் தான் தெரியும்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு படங்களான வருடுகாவலேனு படம் ஜீ 5 தளத்திலும், லக்ஷயா படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.

மேலும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் படமும் டெண்ட்கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த வாரத்தில் மட்டும் சுமார் 5 படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

- Advertisement -spot_img

Trending News