Tamil Cinema News | சினிமா செய்திகள்
சித்ரா தற்கொலைக்கு முக்கிய காரணம் இவங்க தான்.. பதைபதைக்கும் தகவலை வெளியிட்ட காவல்துறை!
சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது தமிழ் சினிமா வட்டாரங்களை உலுக்கியது. ஒவ்வொரு முறையும் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்யும் போது பெரிதாக வரும் செய்தி அதன் பிறகு அப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுகிறது.
இதுவரை தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நட்சத்திரங்களின் உண்மை காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. அதே போல் சித்ராவின் தற்கொலை காரணமும் வெளிவராமல் போய்விடுமோ என ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
நள்ளிரவு வரை படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த சித்ரா, ஹோட்டல் அறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தூக்கு போடும் அளவுக்கு அவருக்கு டார்ச்சல் கொடுத்தது யார்? என்பதை தற்போது தோண்டித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது பற்றிய தகவல்களை காவல்துறையினர், வெளியிட்டு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். அதாவது போலீஸார் நான்கு நாட்களுக்கும் மேலாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்று நோண்டி நொங்கு எடுத்து கொண்டிருக்கிறார்களாம்.
இதன் அடிப்படையில் நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவரும், தாயாரும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஹேமந்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து சித்ராவை வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் சித்ராவிற்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
மறுபுறம் ஹேமந்தோ, குடித்துவிட்டு சித்ராவின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரிடம் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

vj-chithra-cinemapettai
இவ்வாறு மாறி மாறி கணவர் மற்றும் தாய் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தமே அவரது இந்த விபரீதமான முடிவுக்கு முக்கிய காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
எனவே தமிழகத்தின் செல்லப்பிள்ளையான சித்ராவை குடும்பமே சேர்ந்து இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கும் தகவல்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகின்றன.
