நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணமா?

உலகத்திற்கே நடிப்பு என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். அவருடைய தத்ரூபமான நடிப்பை பார்த்து வெளிநாட்டு நடிகர்கள் கூட பிரமித்துப் போய் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் நம்மை கட்டிப் போட்டவர்.

ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரமாகவே மாறி விடுவது அவருடைய தனி சிறப்பு. பெரிய நடிகர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் தன்னை விட வயது குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுப்பது இவருடைய வழக்கம்.

அப்படி அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் இயக்குனர்களிடம் எந்த மாதிரியான நடிப்பை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அவர் கேட்பார். மேலும் அந்த காட்சி நடித்து முடித்தவுடன் நீங்கள் எதிர்பார்த்தபடி இருந்ததா என்று விசாரிப்பார். இதுதான் அவருடைய நடிப்பை மக்கள் பாராட்டுவதற்கு முக்கிய காரணம்.

அவர் நடிப்பில் வெளிவந்த தெய்வமகன், கௌரவம், வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவருடைய ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்டது. மேலும் அவர் தன்னுடைய நடிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர், பிலிம்பேர் கலைமாமணி, தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவ்வளவு விருதுகளை பெற்றுள்ள அவருக்கு தேசிய விருது இதுவரை கிடைக்கவில்லை. இந்திய அளவில் சிறந்த நடிகருக்காக கொடுக்கப்படும் அந்த விருது அவருக்கு கிடைக்காமல் போனது பலருக்கும் ஆச்சரியம் தான். சிவாஜியை விட சுமாராக நடிக்கும் நடிகர்களுக்கு எல்லாம் தேசிய விருது கிடைக்கும் போது அவருக்கு கிடைக்காமல் போனதற்கு பல அரசியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படுகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தான் அவருக்கு வேண்டுமென்றே இந்த விருது வழங்கப்படவில்லை என்ற ஒரு தகவலும் உண்டு. மேலும் தேவர் மகன் படத்தில் சிவாஜியின் தத்ரூப நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருது வழங்குவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் சிவாஜி அந்த விருதை சில காரணங்களால் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்