Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதை பத்தி மட்டும் கேட்காதீங்க: சீறும் பிக்கப் டிராப் நடிகரின் புதுக் காதலி
சென்னை: குடும்பத்தை பற்றி கேள்வி கேட்டால் பிக்கப் டிராப் நடிகரின் லேட்டஸ்ட் காதலிக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறதாம்.
பிக்கப் டிராப் நடிகரின் வாழ்வில் காதல்கள் வருவதும் போவதுமாக உள்ளது. இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் காதலி என்று ஒரு மலைவாழ் பெண்ணாக நடித்த நடிகையின் பெயர் அடிபடுகிறது.
எந்த வசதியும் இல்லாத காட்டில் படத்திற்காக நடிகர் எப்படி கடினமாக உழைத்தார் தெரியுமா என நடிகை பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும்போது தான் இருவருக்கும் இடையே பிக்கப்பாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகையிடம் அவரின் பெற்றோர், குடும்பம் பற்றி கேட்டால் பொசுக்குன்னு கோபம் வருதாம். படத்தை பற்றி கேளுங்க குடும்பத்தை பற்றி எதுவும் கேட்கக் கூடாது என்கிறாராம். மேலும் எந்த கேள்வி கேட்டாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே பதில் சொல்கிறாராம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
