பிரமாண்ட இயக்குனர், சமூக கருத்துக்கள் மூலம் கமர்சியல் படங்களை எடுக்கும் வல்லமை கொண்ட திறமைசாலி எனப் பெயர் எடுத்திருந்த ஷங்கருக்கு முதன்முதலில் அவப்பெயர் ஏற்படுத்திய படம் என்றால் அது பாய்ஸ் தான்.
ஷங்கரிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்ததில்லை என அனைத்து பத்திரிக்கைகளும் கழுவி ஊற்றின. ஆனால் இளம் ரசிகர்கள் மத்தியில் பாய்ஸ் படம் செம வரவேற்பு பெற்றது என்பதை மறந்து விடக்கூடாது.
பாய்ஸ் படத்தில் நடித்த பலருக்கும் இந்த படம் பல்வேறு புகழை பெற்றுக்கொடுத்து சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு சென்றது. அதில் சித்தார்த், பரத், நகுல் போன்றோர் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.
அதேபோல் ஐவரில் ஒருவராக வந்த தமன் தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். பாய்ஸ் படத்திற்கு பிறகு சித்தார்த் சினிமா மார்க்கெட் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிரமாண்டமாக உயர்ந்தது.
அப்படிப்பட்ட பாய்ஸ் பட வாய்ப்பை சித்தார்த்துக்கு வாங்கிக் கொடுத்தவர் பிரபல எழுத்தாளர் சுஜாதா தான். பாய்ஸ் படத்திற்காக ஷங்கரின் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் பல இளைஞர்களை ஊர்ஊராக சென்று தேடி அலைந்து கொண்டிருந்தார்களாம்.
அப்போது பாய்ஸ் படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய சுஜாதா, மணிரத்னத்திடம் உதவி இயக்குனர் ஒருவன் இருக்கிறான் எனவும், அவனை அனுப்புகிறேன் எதற்கும் பாருங்கள், உங்க கேரக்டருக்கு கரெக்டாக இருப்பான் என்று சொல்லி சித்தார்த்துக்கு பாய்ஸ் பட வாய்ப்பை பெற்று கொடுத்தாராம். தனது வாழ்க்கையை மாற்றிய சுஜாதாவிற்கு தினம் பூ போட்டு வணங்கி வருகிறாராம் சித்தார்த்.

எழுத்தாளர் சுஜாதா தற்போது உயிரோடு இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். சங்கரின் படங்களுக்கு முதுகெலும்பாக இருந்த சுஜாதா விட்டுப்போனதன் விளைவுகள் சமீபகாலமாக ஷங்கர் படங்களில் அப்பட்டமாக தெரிகிறது.