சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நடிகைகள் இடையே விவாகரத்து அதிகரித்து இதனால் தான்.. லேடி சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக 80,90 களில் வலம் வந்தவர் விஜயசாந்தி. இவர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

அதனின், நெற்றிக்கண், ரெட்டி பாரதம், அக்னி பர்வத்ஜம், சீனா ராயுடு, மன்னன், ராஜஸ்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, முன்னணி சூப்பர் ஸ்டார்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகையாகவும் நிகழ்ந்தார்.

இவர் ஆந்திர மா நிலத்தில் நந்தி விருதுகள், தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வாங்கியுள்ளார். இன்று வரை அவரது அதிரடி ஆக்சன் காட்சிகளுக்காக அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமாவில் பிஸியாக இருந்தபோதே 96 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு ஆதரவளித்து, ஜெயலலிதாவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தார். அதன்பின், 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் விஜயசாந்தி, 2004 ஆம் ஆண்டு பி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்தார். அதன்பின் கட்சி மாறி மாறி இப்போது காங்கிரஸில் உள்ளார்.

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்த போதிலும் அரசியலில் அவர் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என அரசியல் விமர்ச்கர்கள் கூறுகின்றனர்.

சினிமா நடிகைகள் விவாகரத்து பற்றி விஜயசாந்தி கூறியதாவது:

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர் , “எனக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லை, என் வாழ்வில் சரியாக முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்தேன். என் கணவரை சரியான நேரத்தில் தேர்வு செய்தேன். அதனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். சினிமாவிலும், அரசியலும் அவர்தான் எனக்குத் துணையாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சினிமாவில் பல கதா நாயகிகளின் வாழ்க்கை டைவர்ஸில் முடிகிறது. அது சாபமா எனத் தெரியவில்லை. குடும்ப வாழ்க்கையில் ஈகோ பார்ப்பதால்தான். இருவருக்கும் இடையே புரிதல் இருக்கும் போது விவாகரத்து வராது. இருவரும் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.

நீயா? நானா? எனப் போட்டி போட்டு வாழக் கூடாது. இப்படி குடும்பத்தில் போட்டியிட்டால் வாழ்க்கை நிலைக்காது என்று தெரிவித்துள்ளார். எனக்கு வாழ்க்கையில் டிசிபிளினாக இருப்பது முக்கியம், நான் எந்த பார்டிக்கும் சென்றதில்லை. விருது விழாவிலும் பங்கேற்றதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக சினிமாவில் உள்ள நட்சத்திர தம்பதியர் தங்கள் துணையை விவாகரத்து செய்த நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Trending News