Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-11

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்ப புரியல, இப்ப புரியுது.. யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

அதற்கேற்றார் போல் நேற்று வெளியான போஸ்டரும் இருந்ததால் ரசிகர்கள் அப்ப புரியல, இப்ப புரியுது என்று இந்த தலைப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எப்போதுமே பரபரப்பாக இருக்கும் சோசியல் மீடியா இன்று இன்னும் அதிக பரபரப்புடன் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தளபதி 67 பற்றி வரும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படம் குறித்த பல அப்டேட்டுகள் கடந்த சில தினங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் படத்தின் பூஜை, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல செய்திகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் படகுழு விமானத்தில் இருக்கும் படியான வீடியோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

Also read: விக்ரமை விட வசூலை ஜாஸ்தியாக லோகேஷ் படும் பாடு.. தளபதி 67 செய்யப்போகும் சம்பவம்

அதில் விஜய், த்ரிஷா உட்பட பலரும் இருக்கின்றனர். இதை அடுத்து இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் பற்றிய ப்ரோமோ வீடியோ வெளிவர இருக்கிறது. நேற்று இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த பட குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டு இருந்தது. அதில் விஜய்யின் புகைப்படம் முழுவதும் ரத்தம் தெறிக்கும் அளவுக்கு இருந்தது. இதுவே பட தலைப்பு பற்றிய ஒரு மறைமுக குறிப்பாகவும் நமக்கு தோன்றியது.

அந்த வகையில் தற்போது படத்தின் தலைப்பு பற்றிய ஒரு தகவல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதாவது குருதிப்புனல் என்ற தலைப்பை தான் லோகேஷ் தேர்ந்தெடுத்துள்ளாராம். இதை மீடியா பிரபலங்கள் பலரும் தங்கள் சோசியல் மீடியாவில் நாசுக்காக குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இந்த தலைப்பும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு பின்னால் பல காரணங்களும் இருக்கிறது.

Also read: ரத்தம் தெறிக்க வெளிவந்த போஸ்டரில் இருக்கும் ரகசியம்.. சோசியல் மீடியாவை கலக்கும் தளபதி 67 டைட்டில்

அதாவது லோகேஷ் எந்த அளவுக்கு கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் விக்ரம் திரைப்படத்தை அவர் பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார். அந்த வகையில் கமல் நடித்த படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் தான் இந்த குருதிப்புனல். கடந்த 1995 ஆம் ஆண்டு கமல், அர்ஜுன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகமாகவும் தளபதி 67 இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அர்ஜுனை இந்த படத்திற்கு லோகேஷ் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கமலும் இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் வர இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் குருதிப்புனல் என்ற டைட்டிலை தான் லோகேஷ் தேர்ந்தெடுத்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கேற்றார் போல் நேற்று வெளியான போஸ்டரும் இருந்ததால் ரசிகர்கள் அப்ப புரியல, இப்ப புரியுது என்று இந்த தலைப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also read: பிரீ பிசினஸில் கலக்கும் தளபதின்னு சொல்றாங்க அது உண்மை இல்லை.. எதிர்பார்ப்பை எகிற வைத்தது இவர் மட்டும்தான்

Continue Reading
To Top