Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த சீசனின் படு மொக்கையான டாஸ்க் இதுதானாம்.. பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊத்தும் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அனுதினமும் ஏதாவது ஒன்றை செய்து கொண்டுதான் இருக்கிறது.
ஏற்கனவே சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீசனில், பிக் பாஸும் சும்மா இல்லாம ஏதாச்சும் ஒன்ன கொளுத்தி போட்டுட்டு தான் இருக்காரு.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ், கடந்த இரண்டு வாரங்களாக நடந்த கால் சென்டர் டாஸ்கின் அடிப்படையில் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை ஒன்றிலிருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என கூறி பிக்பாஸ் ரசிகர்களை கடுப்பேத்தி இருக்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடந்தது. முதல் 5 இடங்களை பிடிப்பதற்காக போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
அதிலும் குறிப்பாக பாலாவும் சனமும் கொஞ்சம் ஓவரா போயிட்டாங்கன்னே சொல்லலாம். ஏற்கனவே ஒரு முறை இதே போன்ற ஒரு டாஸ்கை கொடுத்து பிக்பாஸ் கொளுத்திப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மறுபடியும் பிக்பாஸ் இதே போன்ற இன்னொரு டாஸ்கை கொடுத்து வீட்டில் குடுமிப்பிடி சண்டையை தொடங்கி இருப்பது, படு மொக்கையாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருவதோடு, நிகழ்ச்சி குழுவினரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

bigg-boss-task
