மணி ஹெய்ஸ்டை ஓவர் டேக் செய்த வங்கி திருட்டு.. துணிவு படத்தின் உண்மையான கதை இதுதான்

எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் படம் துணிவு. நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது இப்படத்தின் கதை எதைப் பற்றி என்ற தகவல் கசிந்துள்ளது.

மங்காத்தா படத்திற்கு பிறகு பல வருடம் கழித்து துணிவு படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி முன்னதாகவே வெளியாகி இருந்தது. மேலும் மணி ஹெய்ஸ்ட் என்ற வெப் தொடரின் தழுவல் தான் துணிவு படம் என்றும் ப்ரோபோசர் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

Also Read : 20 வருடங்களாக முருகதாஸை ஒதுக்கி வைத்துள்ள அஜித்.. பின்னணியில் இருக்கும் சம்பவம்

ஆனால் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கி திருட்டு நடந்த சம்பவத்தை மையமாக வைத்து துணிவு படத்தை எடுத்து வருகிறார் வினோத். அதாவது 1987 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் பேங்கில் அரங்கேறிய கொள்ளையை அடிப்படையாக இப்படம் எடுக்க உள்ளது.

இந்தியாவில் பகல் வங்கிக் கொள்ளையில் மிகப்பெரிய சம்பவம் நடந்தது என்றால் பஞ்சாப் வங்கி கொள்ளை தான். கிட்டத்தட்ட 12 முதல் 15 பயங்கரவாதிகள் போலீஸ் உடையணிந்து துப்பாக்கிகள் மற்றும் ரைபிள்களுடன் ஆயுதம் ஏந்திய இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனராம். அவர்கள் அனைவரும் 20 இருந்து 40 வயது உடையவர்களாக இருந்துள்ளனர்.

Also Read : அஜித், விஜய், கமலுடன் ஜோடி போட்ட பிரபல நடிகை.. சூப்பர் ஸ்டாருடன் மட்டும் கிடைக்காத வாய்ப்பு

அந்த ஃபேங்கில் இருந்து 4.5 மில்லியன் பணத்துடன் பயங்கரவாதிகள் தப்பினர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியதாம். ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது ஒரு நேர்த்தியான மற்றும் சுத்தமான நடவடிக்கை என்று போலீஸ் விவரித்திருந்தது.

இந்த பஞ்சாப் வங்கி திருட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் துணிவு படத்தில் பயங்கரவாதிகளின் தலைவராக அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் துப்பாக்கியை கையில் வைத்த அஜித் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போல போஸ்டர் வெளியாகி இருந்தது.

Also Read : முனிவர் போல நீண்டு கொண்டே போகும் அஜித்தின் தாடி.. வைரலாகும் கேதார்நாத் புகைப்படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்