fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா என பல கலைஞர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று பிரான்ஸில் நடக்க இருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருக்கிறது.

இந்நிலையில் சங்கமித்ரா படத்தின் கதை என்ன என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

அதாவது, சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது.

தமிழ் திரைப்பட மகுடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்க சங்கமித்ரா முயல்கிறது. தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு எங்கள் சமர்ப்பணம். இது கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும். சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top