முருகதாஸின் அடுத்தப்படத்தின் கதை இதுதான்

முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கின்றார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றார். இந்நிலையில் ஸ்பைடர் படத்தின் கதை கசிந்துள்ளது.

இப்படம் புலனாய்வுத்துறை குறித்தது என்பது தான் என்று டைட்டில் வைத்தே சொல்லிவிடலாம், மேலும் படத்தின் கதை ஒரு பயோ பயங்கரவாதம் குறித்தது என்றும், அதுமட்டுமின்றி புலனாய்வு துறையில் உள்ள அதிகாரிகளின் ஊழலை வெட்டவெளிச்சமாக்கும் கதை என்றும் கூறப்படுகிறது

ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Comments

comments