fbpx
Connect with us

வேலவன் ஸ்டோர்ஸின் வெற்றி ரகசியம் இதுதானாம்.. அசரவைக்கும் பேட்டி அளித்த உரிமையாளர்!

velavan-stores-1

Tamil Nadu | தமிழ் நாடு

வேலவன் ஸ்டோர்ஸின் வெற்றி ரகசியம் இதுதானாம்.. அசரவைக்கும் பேட்டி அளித்த உரிமையாளர்!

தூத்துக்குடியில் 1998 ஆம் ஆண்டு தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தொடங்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ்.

மேலும் மிகக்குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்ததால் தூத்துக்குடி மக்களிடையே வேலவன் ஸ்டோர்ஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த வேலவன் ஸ்டோர்ஸ் சென்னை டி நகர், ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் உஸ்மான் ரோட்டில் பிரம்மாண்டமாக ஏழு அடுக்கு மாடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடிய முன்கள வீரர்களுக்கு தள்ளுபடி க்கு மேல் 10 சதவீத தள்ளுபடியை அறிவித்தனர் வேலவன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்

தற்போது வேலன் ஸ்டோர்ஸில் உரிமையாளரின் அசரவைக்கும் பேட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது வேலவன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஆனந்த், ‘நாங்கள் ஒரு அடித்தட்டு குடும்பத்தில் வளர்ந்து வந்தவர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை அடுத்து பேசிய ஆனந்த், இந்தக் கடை சிங்கிள் ஓனர் கட்டுப்பாட்டில் சென்னை மற்றும் தூத்துக்குடி என இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது என்றும், ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் நேரடியாக தயாரிக்கும் இடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் எங்குமே கிடைக்காத குறைந்த விலையில் நிறைவான தரத்துடன் பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்ய முடிகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இறுதியாக, ‘நிறைந்த தரம்.. குறைந்த விலை.. என்பதுதான் எங்களது கொள்கை. எங்களது வெற்றியின் ரகசியமும் இதுதான்’ என்று  தெரிவித்திருக்கிறார் ஆனந்த். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top