Tamil Cinema News | சினிமா செய்திகள்
சமுத்திரக்கனியின் முதல் நாள் சம்பளம் எவ்வளோ தெரியுமா.? ஆனா இப்ப கோடிகளில் குளிக்கிறார்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர் தான் சமுத்திரக்கனி. அதுமட்டுமில்லாமல் சமுத்திரக்கனி சில சீரியல் தொடர்களில் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.
மேலும் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடித்ததன் மூலம் சமுத்திரகனி ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அறியப்பட்டார். பின்னர், ‘நாடோடிகள்’ படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார்.
இந்த நிலையில் சமுத்திரகனி முதன் முதலாக வாங்கிய சம்பளம் பற்றிய விபரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது சமுத்திரகனி சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்தாலும், அதற்கான உடலமைப்பு இல்லாததால் புறக்கணிக்கப்பட்டாராம்.
இதனால் 1995ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘படிக்கிற வயசிலே’ என்ற படத்தில் முதன்முதலாக துணை நடிகராக நடித்தாராம். அப்போது அவருக்கு ஒரு நாளுக்கு பத்து ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இந்த தகவல்களை சமுத்திரக்கனியே தெரிவித்திருக்கிறார்.
மேலும், பல சோதனைகளைத் தாண்டி அங்குலம் அங்குலமாக முன்னேறி தான், இந்த இடத்திற்கு வந்ததாகவும் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார் சமுத்திரகனி.
ராஜமௌலின் படத்தில் சம்பளமே வேண்டாம் என்று நடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் சமுத்திரக்கனியை கூப்பிட்டு 2 கோடி வரை சம்பளம் கொடுத்து உள்ளார், இது சினிமா துறையில் அவர் உழைப்புக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என்றே கூறலாம்.
எனவே, இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலருக்கு உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற தூண்டுதலையும் ஏற்படுத்தி உள்ளது.

rajamouli-samuthirakani-rrr-cinemapettai
