தெலுங்கு, மலையாள, கன்னட படங்களை இயக்காமல் போனதற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்து கூறிய பாக்கியராஜ்

தமிழ் சினிமாவில் ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ். அதற்கு முன்பு சில படங்களில் சிறு சிறு வேடத்திலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தார். அது மட்டுமில்லாமல் பல படங்களுக்கு திரைக்கதை எழுதும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கிட்டத்தட்ட 31 வருடங்கள் இயக்குனராக இருந்த பாக்யராஜ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களை இயக்காமல் போனதற்கு இதுதான் காரணம் என்று பேட்டி ஒன்றின் மூலம் தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.

அதில், ‘ நான் தமிழில் எடுக்கும் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகும். எனவே அரைச்ச மாவை அரைப்பதற்கு ஆறு மாதம் செலவிடுவதற்கு புதிய ஸ்கிரிப்டை உருவாக்கிவிடலாம் என்ற ஆர்வமே என்னிடம் அதிகமாக இருந்தது.

ஏனென்றால் பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியம் என்பது என்னுடைய எண்ணம் அல்ல. ஒரே படத்தை தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில் என அனைத்து மொழிகளிலும் உருவாக்கி அதிக சம்பளம் பெறலாம் என்று எனது மனம் கணக்கு போடாமல்,

புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் பணம் சம்பாதிக்க தவறிவிட்டேன். ஏனென்றால் தற்காலத்தில் ஒரு படத்தை எடுத்து அதை அப்படியே தமிழ், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒரு ரவுண்ட் அடித்து வருவதால் எளிதில் செட்டில் ஆகி விடுகின்றனர்.

Bhagyara-cinamapettai

ஆனால் என்னை பொறுத்தவரை நான் அப்படி செய்திருந்தால், இவ்வளவு படம் என்னால் எடுத்திருக்க முடியாது. அந்த வகையில் நான் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொள்ளுவேன்’ என்று பிரபல இயக்குனர் பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்