புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டிவி டிஆர்பி யில் தோற்றுதற்கு இதுதான் காரணம்.. 2 மருமகள்கள் செய்யும் ஆர்ப்பாட்டம்

Vijay Tv Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்வதற்கு ஏற்ப டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் தக்க வைத்திருக்கிறது. இதில் டாப் 5 இடத்திற்கு எப்படியாவது விஜய் டிவியில் உள்ள ஒரு சீரியல் வந்துவிடும். ஆனால் சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தோற்றுப் போய் வருகிறது. அதற்கு காரணம் மக்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி, கதை மோசமாகவும் சம்பந்தமே இல்லாமல் ட்ராக் போய்க் கொண்டிருப்பதால் மக்கள் நாடகத்தின் மீது வெறுப்பை கொட்டி வருகிறார்கள்.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் ரொம்பவே அடிவாங்கி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு வரை டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலித்து வந்த சிறகடிக்கும் ஆசை சீரியல் தற்போது ஏழாவது இடத்திற்கு போய்விட்டது. இதற்கு காரணம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் முத்து மற்றும் மீனாவிற்கு தொடர்ந்து கெடுதல் பண்ணும் விதமாக ரோகிணியின் கதாபாத்திரம் எரிச்சலை ஊட்டும் விதமாக இருப்பதால்தான்.

அதிலும் ரோகிணி பொய்யும் பித்தலாட்டங்களையும் செய்து வந்து விஜயாவின் மருமகளாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயாவும் பணத்தாசை பிடித்த ஒரு மாமியாராக இருப்பதால் ரோகிணியை தலையை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார், ஆனால் ரோகிணி அதற்கு கொஞ்சம் கூட லாயக்கில்லை என்பதற்கு ஏற்ப ஏற்கனவே வேறொரு கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை இருப்பதை மறைத்து விட்டு மருமகளாக நுழைந்திருக்கிறார்.

அத்துடன் பணக்கார வீட்டுப் பெண் என்று சொல்லியும் ஏமாற்றிய வருகிறார். போதாதற்கு மருமகளாக வந்த பின்பும் ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளை பார்த்து மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறார். தன்னுடைய சுயநலத்திற்கும் தன் வாழ்க்கைக்காகவும் மற்றவர்களை பலியாடாக ஆக்குவதற்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் அனைவரையும் சீண்டி பார்க்கிறார்.

இதில் முத்து மற்றும் மீனா சிக்கிக்கொண்டார்கள். அதனால் தான் இந்த நாடகம் தற்போது மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. இதே மாதிரி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் மருமகளாக தங்கமயில் பல பொய்களை சொல்லி நுழைந்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை மாமனார் குடும்பத்திற்கு எந்த வித தீங்கும் நினைக்காத ஒரு கேரக்டராக தான் இருக்கிறது.

இருந்தாலும் அவ்வப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறும் என்று சொல்வதற்கு ஏற்ப அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு தங்கமயில் ஆட்டத்தை ஆரம்பித்து வருகிறார். இதை இப்பொழுதே கண்டுபிடிக்கும் விதமாக சில காட்சிகள் அதிரடியாக இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

அப்படி இல்லை என்றால் ரோகிணி கதாபாத்திரம் மாதிரி தங்கமயில் கதாபாத்திரமும் எரிச்சல் அடைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி இந்த இரண்டு சீரியல்களிலும் மருமகளாக வந்த ரோகினி மற்றும் தங்கமயில் கேரக்டரால் தான் விஜய் டிவி சீரியல் மொத்தமாக அடி வாங்கிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

Trending News