fbpx
Connect with us

Cinemapettai

இந்த மனுஷன் மட்டும் கூப்பிட்டால் கதையெல்லாம் கேட்கவே மாட்டேன்.. யோகிபாபு கூறிய ரகசியம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த மனுஷன் மட்டும் கூப்பிட்டால் கதையெல்லாம் கேட்கவே மாட்டேன்.. யோகிபாபு கூறிய ரகசியம்

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் தான் சுந்தர் சி. இவர் பல படங்களை இயக்கியும் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். மேலும் இவர் இயக்கி நடித்த ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ போன்ற படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் தற்போது இவரைப் பற்றி பிரபலமான காமெடி நடிகர் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் காமெடியில் இவர அடிச்சிக்க யாரும் கிடையாது என்ற அளவிற்கு புகழ் பெற்றவர் தான் யோகி பாபு. மேலும் சுந்தர் சி இயக்கும் படங்களில் யோகி பாபு கண்டிப்பாக இடம் பெற்றிருப்பார்.

இந்த நிலையில் தற்போது யோகி பாபு சுந்தர் சியை பற்றி சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், சுந்தர் சி தனது குடும்ப நண்பர் போன்றவர் என்றும், மேலும் அவர் எப்பொழுது கூப்பிட்டாலும் தான் கதை கூட கேட்காமல் நடிக்க தயாராகி விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சுந்தர்சி தயாரிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஈசிஆரில் 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திலும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை பற்றி யோகி பாபு தெரிவித்ததாவது , ‘இந்த படத்தின் கதையை நான் கேட்காமலே ஒப்புக் கொண்டேன். ஆனால் கதை கேட்டபோது அருமையாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

தற்போது வரை பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, யோகி பாபு, ரித்திகா சிங், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தற்போது சந்தானத்தின் பட வாய்ப்புகளை எல்லாம் யோகிபாபு தட்டி செல்கிறார் என்று  கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

Continue Reading
To Top