fbpx
Connect with us

சிம்புவின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் யார் தெரியுமா? அவரே சொன்ன பதில்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் யார் தெரியுமா? அவரே சொன்ன பதில்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.

மேலும் தற்போது நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இவ்வாறிருக்க, சிம்பு தனது உடல் எடையை குறைத்ததற்கான காரணத்தை கண்கலங்கியபடி தனது பயிற்சியாளரிடம் கூறியிருக்கிறார். அந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு, சிம்புவின் ரசிகர்களை ககுஷி படுத்தியுள்ளது.

அதாவது சிம்பு ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தொடங்குவதற்கு முன் 101 கிலோவில் இருந்தாராம். பின்னர் கடினமான உடற்பயிற்சியை மேற்கொண்டு 71 கிலோவாக தனது எடையை குறைத்துள்ளாராம் சிம்பு.

மேலும் இதுபற்றி தன்னுடைய பயிற்சியாளரிடம் சிம்பு, ‘இந்தக் கடினமான உடற்பயிற்சியை நான் செய்வதற்கு தூண்டுகோலாக இருந்தது என்னுடைய ரசிகர்கள் தான்.  இதை நான் செய்தது எனது ரசிகர்களுக்காக மட்டுமே’ என்று கண்கலங்கியபடி கூறியுள்ளாராம்.

str simbhu

இந்த செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள், சிம்பு அவர்கள் மீது வைத்துள்ள பாசத்தை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top