RRR படத்தில் ராம்சரண் ராமராக நடிக்க இதுதான் காரணம்.. வரலாறு தெரியாமல் சர்ச்சையை கிளப்பும் நபர்கள்

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது ஆர்ஆர்ஆர் படம். அத்துடன் இப்படத்திற்கு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இப்படத்தில் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர், ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடித்த இருந்தனர்.

அத்துடன் ராம்சரண் இப்படத்தில் பிரிட்டிஷ் காவலாளியாக காண்பிக்கப்பட்ட இருப்பார். இப்படத்தின் இறுதியில் ராமர் போல் காட்சி அளித்து வில் அம்பு எய்தி வில்லனை ராம்சரண் கொள்ளுவார். இதனைப் பார்த்த பலரும் ராம்சரன் உயர் ஜாதி மக்களை பெருமைப்படுத்தும் வகையில் நடித்ததாக குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

மேலும் புராணக் கதைப்படி ராமராக ராம்சரண் நடித்ததால் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் சூசகமாக ராம்சரண் தாக்கிப் பேசி வந்தனர். ஆனால் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் ராமராக நடிக்க காரணம் 1897 ஆம் ஆண்டு பிறந்த அல்லூரி சீதாராமன் ராஜு தனது 18 வயதில் துறவியாக மாறினார்.

அதன்பிறகு 27 வயதில் பழங்குடி மக்களின் போராட்டத்திற்காக ஆங்கிலேய கிறிஸ்தவர்களில் மரத்தால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இப்படம் எடுக்கப்பட்டது. அதேபோல் ராம் சரணும் ராமராக உருவெடுத்து ஆங்கிலேயர்களுடன் போரிடுவது போல் படத்தில் காட்டப்பட்டது.

ஆனால் இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு ராம் சரணை தாக்கி பேசி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் வெளியீடு ரிலீஸ் தேதியன்று படத்தில் ராம்சரன் ராமர் தோற்றத்தில் இருப்பதால் சிலர் ராமர் வேடமிட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

ராம்சரண் எந்த மதத்தையும் தாழ்த்தியோ அல்லது சில மாயத்தை உயர்த்தியோ காட்ட வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஆர் ஆர் ஆர் படம் பல விமர்சனங்கள் எழுந்தாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்