Connect with us

Cinemapettai

விஜய் படத்திலிருந்து முருகதாஸ் விலக காரணம் இவரா? தம்மாத்துண்டு இருந்துட்டு என்னமா வேல பார்த்து இருக்காரு!

vijay-murugadoss-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படத்திலிருந்து முருகதாஸ் விலக காரணம் இவரா? தம்மாத்துண்டு இருந்துட்டு என்னமா வேல பார்த்து இருக்காரு!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுக்கும், விஜய்க்கும் இடையேயான நட்பு நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் இணைந்து துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தனர்.

மேலும் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால் சில காரணங்களால் ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.

சமீபத்தில் டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான நெல்சன், தளபதியின் 65 வது படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய்-முருகதாஸ் கூட்டணி திடீரென முறிந்ததற்கு காரணம் அனிருத் தான் என கோலிவுட்டில் கூறப்படுகிறது.

அதாவது விஜய் 65 இயக்குனரான நெல்சனும், அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாம். மேலும் விஜய்- முருகதாஸ் இணையும் படத்தில் தான் இசையமைக்கப் போவதாக அனிருத்  கோட்டை கட்டி கொண்டிருந்தபோது,  அதை உடைக்கும் வகையில் தமன் தான் ‘விஜய் 65’ படத்தின் இசை அமைப்பாளர் என்று கூறியது அவரை அதிர்ச்சி அடைய  செய்ததாக தெரிகிறது.

இதனால் சில பல வேலைகளை பார்த்து விஜய்-முருகதாஸ் கூட்டணியை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அனிருத் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் நெல்சனின் புதிய கூட்டணியில் உருவாக உள்ள விஜய் 65வது  படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக  அறிவிக்கப்பட்டிருப்பது இந்த சந்தேகத்தை ஊர்ஜிதமாகியுள்ளது.

aniruth

aniruth

எனவே, அனிருத் செய்திருக்கும் செயலை பார்த்த பலர் ‘இப்படி கூற இருந்தே கால வாரி விட்டுட்டாரே’ இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top