அவசரமாய் வேட்டையன் ரிலீஸை அறிவித்த லைக்கா.. ரஜினியை வைத்து அஜித்துக்கு கிடைத்த வாழ்வு

Actor Rajini: சூப்பர் ஸ்டார் இப்போது பரபரப்பாக நடித்து வருகிறார். லைக்கா தயாரிப்பில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்த வேட்டையன் அக்டோபர் மாதத்தை குறி வைத்துள்ளது.

இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தான் வெளியாகும். இதை நம்பி தான் லைக்கா தற்போது மிகப்பெரும் பிளான் போட்டிருக்கிறது.

அதாவது எப்போதோ தொடங்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி இன்னும் தத்தளித்து கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் படம் வெளிவருமா என்று கூட சிலர் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்து விட்டனர்.

வேட்டையனால் அஜித்துக்கு வந்த வாழ்வு

அதனாலேயே தயாரிப்பு தரப்பு ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவர் வாயையும் அடைத்தது. அதில் அஜித் கடுமையான ரிஸ்க் எடுத்து நடித்தது பாராட்டுதலையும் பெற்று வருகிறது.

அதே சூட்டோடு வேட்டையன் அறிவிப்பும் வெளிவந்தது. ஏனென்றால் இப்படத்தின் வியாபாரத்தை வைத்து தான் விடாமுயற்சி படத்தை முடிக்க வேண்டும் என லைக்கா முடிவு செய்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது வேட்டையன் பிசினஸ் ஜோராக ஆரம்பித்துவிட்டது. சூப்பர் ஸ்டார் படம் என்றாலே உலக அளவில் வியாபாரம் பிச்சு கொண்டு போகும்.

அதிலும் போட்ட பட்ஜெட்டை ப்ரீ பிசினஸ் மூலம் நிச்சயம் எடுத்து விடலாம். இதுதான் வேட்டையன் ரிலீசுக்கு பின்னால் இருக்கும் காரணம்.

ஆக மொத்தம் சூப்பர் ஸ்டாரால் அஜித்துக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. இதனால் அவருடைய ரசிகர்களும் இப்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -