Connect with us

Cinemapettai

தளபதி நண்பருடன் தீபாவளி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் வைரல் வீடியோ.. காரணத்தைக் கேட்டு அசந்து போன ரசிகர்கள்!

vijay-keerthy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி நண்பருடன் தீபாவளி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் வைரல் வீடியோ.. காரணத்தைக் கேட்டு அசந்து போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது முன்னணி நடிகையாக பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும் தன்னுடைய அழகாலும், தன் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இதனால் தமிழகத்தில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இவ்வாறிருக்க, சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி பண்டிகையை நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் நண்பரான சஞ்சீவ் குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் ‘இவங்க கூட  கீர்த்திக்கு என்ன உறவு’ என்று சமூக வலைதளத்தின் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் உறவை பற்றி சஞ்சீவின் மனைவியான ப்ரீத்தி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது சஞ்சீவ் மனைவி ப்ரீத்தியும் கீர்த்தி கீர்த்தி சுரேஷும் ஒன்றாக தீபாவளி கொண்டாடிய வீடியோவை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

இதைப் பார்த்த பலரும் ‘நீங்கள் கீர்த்தி சுரேஷின் உறவினரா?’ என்று ப்ரீத்தியிடம் கேட்டுள்ளனர்.

எனவே பிரீத்தி ஒரு பேட்டியில் இதுபற்றி கூறுகையில், ‘கீர்த்திசுரேஷ் தன்னுடைய பக்கத்துவீட்டுக்காரர் என்றும், அவர் தனக்கு ஒரு குழந்தை மாதிரி என்றும், தன்னுடைய குழந்தைகள் சரியாக ஐந்தரை மணிக்கு கீர்த்தி சுரேஷ் உடன் விளையாடுவது வழக்கம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி பெருமளவு பேசப்பட்டு வருகிறது. சஞ்சீவ் குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய வீடியோ இதோ:

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top