மட்டும் 4 கோடியை அள்ளி வீசிய தயாரிப்பு நிறுவனம் விளம்பரதிற்கு பல கோடிகளை அள்ளி வீசியுள்ளது. பேருந்து முதல் சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை மெர்சல் மெர்சல் மெர்சல் தான்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற உலக சாதனையை படைத்து நிற்கிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி கிடக்கிறது.

mersal

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளிவராது என அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். இதற்க்கு காரணம், படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ளது அதனால் தான் ட்ரெய்லரை வெளியிடவில்லை என சப்பை கட்டு கட்டியது.

ஆனால், உண்மை என்னவென்றால், படத்தின் ட்ரெய்லரில் இருந்து, ப்ரோமோ வீடியோ என்ற பெயரில் இரண்டு ப்ரோமோ வீடியோக்களை அவசர கதியில் கட் செய்து தொலைகாட்சியில் வெளியிட்டுள்ளது படக்குழு.

vijay mersal

இதனால், ட்ரெய்லர் என்ற பெயரில் மீண்டும் அதே ப்ரோமோ வீடியோக்களுடன் சில காட்சிகளை சேர்த்து வெளியிட்டால் சிறப்பாக இருக்காது என்பதாலும், மீண்டும் படத்திலிருந்து சில காட்சிகளை கட் செய்து ட்ரெய்லரை தயாரிக்கும் பட்சத்தில் படத்தின் கதை தெரிந்துவிடும் என்பதாலும் தான் ட்ரெய்லரே வேண்டாம் என முடிவு செய்துவிட்டது படக்குழு.

Thalapathy Vijay with Gogo Requiem

அதுவும் சரிதான், ஏற்கனவே வெளியான டீசறை வைத்து இது தான் கதை, அது தான் கதை என்று ஆளாளுக்கு ஒரு கதை சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில், ட்ரெய்லர் வந்தால் முழு திரைக்கதையே எழுதிவிடுவார்கள் நம்ம ஆளுங்க.

ஆனால், இன்னும் இரண்டு ப்ரோமோ வீடியோ வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தகவலை கசிய விட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here