சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கேட்டது வரம் கிடைத்தது ஜுரம்.. கங்குவா நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணம் என்ன, யார் மீது தவறு.?

Kanguva: ஞானவேல் ராஜா இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கங்குவா நேற்று வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்திற்கு ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதேபோல் பட குழுவினர் இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்து ப்ரோமோஷன் வரை அனைத்தையும் ஆர்ப்பாட்டமாக செய்தனர். அதிலும் தயாரிப்பாளர் படம் 2000 கோடி வசூல் செய்யும் என ஏகப்பட்ட அலப்பறை செய்தார்.

அப்போதே வாயை வச்சுட்டு சும்மா இருந்தாலே படம் ஹிட் ஆயிடும் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. நேற்று கங்குவா படத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த பலர் இப்போது சோசியல் மீடியாவில் நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதிலும் சிலர் படத்தை பார்த்து முடித்துவிட்டு தலைவலி மாத்திரை வாங்க சென்றதாக கூட பதிவிட்டு வருகின்றனர். இப்படி படத்தை சுற்றி பல நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சிறுத்தை சிவாவும் சூர்யாவும் தான்.

சூர்யா செய்த தவறு

சூர்யா இந்த மாதிரி ஒரு கதையை எதற்காக தேர்ந்தெடுத்தார் என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் சிறுத்தை சிவா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்ற பேச்சும் எழுந்துள்ளது.

மேலும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் அதிகப்படியான இரைச்சல் தான். அதுதான் பலருக்கும் தலைவலியை ஏற்படுத்தி விட்டது. தேவையான இடங்களில் மட்டும் வைத்திருந்தாலே படத்தை பார்த்திருக்கலாம். இப்படி அதிகப்படியான சத்தத்தை கொடுத்து டென்ஷன் செய்து விட்டது பட குழு.

இதை சோசியல் மீடியாவில் பெரியவர் ஒருவர் வெளிப்படையாக சொல்லி திட்டியதை கூட நம்மால் பார்க்க முடிந்தது. மேலும் பாகுபலி பிரம்மாண்ட படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.

ஆனால் அதை பார்த்துவிட்டு யாரும் படமெடுக்க வேண்டாம் கங்குவா நிலை தான் வரும் என்ற பேச்சு பரவலாக ஆரம்பித்துவிட்டது. இப்படி ஒரு சிக்கலை சூர்யா எதிர்கொண்டுள்ளார். இதில் பாகம் 2 வேறு வர இருக்கிறது.

அது எப்படி இருக்குமோ தெரியவில்லை. சொல்லப்போனால் இந்தியன் 2 பட நிலைமையில் தான் கங்குவா உள்ளது. பார்ப்போம் முதல் பாகத்தில் செய்த தவறை இரண்டாம் பாகத்தில் சிறுத்தை சிவா சரி செய்வாரா என.

- Advertisement -

Trending News