செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

முழு வன்மத்தையும் கொட்டிய விக்கி, நயன்.. தனுஷ் மீது தவறா, உண்மை என்ன.?

Dhanush: இன்று முழுக்க சோசியல் மீடியாக்களில் தனுஷ், நயன்தாரா விவகாரம் தான் பூதாகரமாக வெடித்துள்ளது. நயன் வெளியிட்ட மூன்று பக்க அறிக்கையில் தனுசை எந்த அளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தேவையில்லாத வார்த்தைகளையும் பயன்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதிலும் அப்பா அண்ணன் மூலம்தான் தனுஷ் இந்த இடத்திற்கு வந்தார் என்றும் தான் எந்த பின்புலமும் இல்லாமல் திறமையோடு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதான் ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

சினிமா பின்புலம் இருந்தாலும் திறமை இருந்தால் மட்டும்தான் ஒருவரால் ஹாலிவுட் வரை சென்று ஜெயிக்க முடியும். கோலிவுட்டில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் ஜொலிக்க முடியாமல் இருக்கின்றனர்.

இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? அப்படி என்ன தனுஷ் மீது உங்களுக்கு இப்படி ஒரு வன்மம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .இது ஒரு பக்கம் இருக்க உண்மையில் என்னதான் நடந்தது தனுஷ் மீது தான் தவறா? என பல கேள்விகள் சுற்றி வருகிறது.

தனுஷ் மீது வன்மத்தை கொட்டும் நயன்

இதில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நயன்தாராவின் அறிக்கையை பார்க்கும் போதே தெரிகிறது. அது விக்னேஷ் சிவன் எழுதியது தான் என்று. அந்த கடிதம் முழுக்க அவர் தன்னுடைய கோபத்தையும் வன்மத்தையும் தான் காட்டி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி முறையாக அனுமதி கேட்காமல் தனுஷுக்கு நெருக்கமாக இருப்பவர் மூலம் தடையில்லா சான்றுகளை பெற முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தனுசுக்கு இந்த விஷயம் தெரிய வந்த நிலையில் முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதற்கு காரணம் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மனக்கசப்பு தான். தனுஷ் முடியாது என்று சொன்னதால் பல்வேறு விதங்களில் அவருக்கு நயன்தாரா தரப்பில் இருந்து டார்ச்சர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதற்கும் அவர் அசரவில்லை.

ஒரு கட்டத்தில் முடியாது என்று தெரிந்த நிலையில் தான் இப்படி ஒரு அறிக்கையை விட்டு அவர் பெயரை கெடுக்க முயற்சி செய்துள்ளனர். உண்மையில் விக்கி நயன் திட்டமிட்டு தான் இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கின்றனர்.

தற்போது தனுஷுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் நயன்தாராவுக்கு எதிரான கருத்துகளும் எழுந்துள்ளது. தயாரிப்பாளர்கள் கெஞ்சினால் கூட பிரமோஷனுக்கு வராத நீங்கள் எப்படிப்பட்டவர் என ஊருக்கே தெரியும் என ரசிகர்கள் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News