திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா.? எதிரிக்கு எதிரி நண்பன், விஜய் ரசிகர்களின் மன மாற்றம்

Vijay-Ajith: விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதே சமயம் அவருக்கு திரை துறையில் இருந்து பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அஜித்தின் ஆதரவும் விஜய்க்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம். அவருடைய ரேஸ் காரில் இருக்கும் TVK கட்சி கொடியின் நிறம் தான்.

அதேபோல் அவரின் ரேஸ் உடையயிலும் சிவப்பு மஞ்சள் நிறம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது போதாதா ரசிகர்களுக்கு. உடனே அவர்கள் அஜித்தின் ஆதரவு தளபதிக்கு உண்டு என செய்தியை பரப்ப தொடங்கி விட்டனர்.

இதன் பின்னணியை ஆராய்ந்து பார்த்ததில் இந்த நிறம் வெற்றியை குறிக்கிறது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனாலேயே விஜய் இந்த நிறத்தை தன் கட்சிக்கொடியாக தேர்ந்தெடுத்துள்ளார்.

விஜய்க்கு ஆதரவு தரும் அஜித்

அதேபோல் அஜித்துக்கும் ஜோதிடம் குறித்து நன்றாக தெரியும். அதனால் தான் அவரும் இதே நிறத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.

அதாவது விஜய் தன்னுடைய எதிரியாக யாரை பார்க்கிறாரோ அவர்தான் அஜித்துக்கும் எதிரியாக இருக்கிறார். அவர்தான் அஜித்தை பெருமளவு காயப்படுத்தி இருக்கிறார். இதனால் அவருடைய மறைமுக ஆதரவு விஜய்க்கு தான் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் விடாமுயற்சி டீசர் வெளிவந்த போது விஜய் ரசிகர்களும் அதை பாராட்டினார்கள். இதுவே உலக அதிசயமாக இருக்கிறது. இதற்கு காரணமும் மேலே சொன்ன சமாச்சாரம் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

- Advertisement -

Trending News