செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கோவில் கோவிலாக சுற்றும் ஜோதிகா.. நிஜ வாழ்க்கையிலும் நடிப்பா, திடீர் பக்தியின் காரணம்

Jyothika: ஜோதிகா தான் இப்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஆக உள்ளார். கங்குவா படத்திற்கு எல்லா பக்கமும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து அவர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதில் தன்னுடைய மொத்த ஆதங்கத்தையும் கொட்டி இருந்தார். ஆனால் ரசிகர்கள் அதையும் விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல் கங்குவா நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அதிக இரைச்சல் ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணமும் இருக்கிறது.

அதாவது ஜோதிகா ஒரு விழாவில் கோவிலுக்கு நிறைய காசு கொடுக்கிறீர்கள். அதே போல் மருத்துவமனை பள்ளிக்கூடம் ஆகியவற்றுக்கும் செலவு செய்யுங்கள் என கூறியிருந்தார்.

அது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் அவருக்கு எதிரான கருத்துகளும் கிளம்பியது. அதன் எதிர் வினை தான் கங்குவா விமர்சனம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவு குரல்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் அவர் ஜோதிகாவுடன் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார். அதேபோல் ஜோதிகா இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

ஜோதிகாவுக்கு வந்த திடீர் பக்தி

இதுவும் தற்போது சர்ச்சையாக தான் பேசப்படுகிறது. அதாவது இப்போது எதற்கு கோவில் கோவிலா போறீங்க. இந்த காசை மருத்துவமனைக்கு கொடுக்க வேண்டியது தானே. நிஜ வாழ்க்கையிலும் அருமையாக நடிக்கிறீர்கள்.

அப்போது பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்வதற்கு மட்டும் ஈகோ தடுக்கிறதா. ஒருவேளை தங்குவா வெற்றியடைந்திருந்தால் இந்த திடீர் பக்தி வந்திருக்காது.

மக்களையும் கடவுளையும் ஏமாற்ற நினைப்பது உண்மையான பக்தி கிடையாது. உண்மையான மனமாற்றம் வந்து கடவுளை வணங்குவது தான் இதற்கு தீர்வாகும் என ஆன்மீகப் பற்றாளர் திருவண்ணாமலை கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுவே ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலித்து வருகிறது.

- Advertisement -

Trending News