ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தரமான சம்பவம் செய்தும் வெளியேற்றப்பட்ட ரவீந்தர்.. பிக்பாஸ் எலிமினேஷனுக்கு காரணம் இவரா.?

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் முடிவடைந்து இருக்கின்றது. அதற்குள்ளாகவே நிகழ்ச்சி ஏகப்பட்ட விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் கடந்துவிட்டது.

அதில் முக்கியமாக நேற்று ரவீந்தர் வெளியேற்றப்பட்டதற்கு பின்னால் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏனென்றால் ஓட்டு நிலவரம் பொருத்தவரையில் அவர் கடைசி இடத்தில் இல்லை. ஆனாலும் அவர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இத்தனைக்கும் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் தரமான சம்பவம் செய்த ஒரே ஆள் இவர் தான். இவர் ஆரம்பித்த பிராங்க் பூதாகரமாக வெடித்து விஜய் சேதுபதி தலையிட்டு பஞ்சாயத்து செய்தது வரை தொடர்ந்தது.

அப்படி இருந்தும் கூட இவர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என ரசிகர்கள் அதிருப்தியுடன் பேசி வருகின்றனர். உண்மையில் ரவீந்தருக்கு சில உடல் நல பிரச்சனைகள் இருக்கிறது.

ரவீந்தர் வெளியேற்றத்திற்கு காரணம் இதுதான்

நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அவர் விஜய் டிவி தரப்பிடம் சில சலுகைகள் வேண்டும் என கேட்டு இருக்கிறார். சேனல் தரப்பும் அதற்கு சம்மதித்து தான் அவரை வீட்டுக்குள் வரவழைத்து இருக்கின்றனர்.

ஆனாலும் அவருக்கு பல நேரங்களில் அசௌகரியங்கள் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். அதனாலேயே அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் ரவீந்தரை இந்த வாரம் வெளியில் அனுப்பும்படி சேனலிடம் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் ரவீந்தரின் வெளியேற்றம் ஆடியன்ஸை கலக்கப்படுத்தி விட்டது. ஆனாலும் வெளியில் வந்துள்ள அவர் சில உண்மைகளை போட்டு உடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News