Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமணத்திற்கு முன்னரே ஐஸ்வர்யா ராய் போல் அபிஷேக்கு இருந்த 5 வருட காதல்.. நிச்சயதார்த்தம் வரை சென்று முடிவுக்கு வந்த சோகம்!
பாலிவுட்டில் முன்னணி காதல் ஜோடியாக இருந்து வந்தவர்கள்தான் அபிஷேக் பச்சன் மற்றும் கரிஷ்மா கபூர் ஜோடி. இருவரது காதலும் நிச்சயதார்த்தம் வரை சென்று தடைபட்டு விட்டது.
இந்த நிலையில் அபிஷேக் மற்றும் கரிஷ்மாவின் காதல் பிரிவிற்கான காரணம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது அபிஷேக் பச்சன், கரிஷ்மா கபூரை அவரது சகோதரியான ஸ்வேதா பச்சனின் திருமணத்தில் தான் முதன்முறையாக சந்தித்தாராம். அதைத் தொடர்ந்து இருவரும் ஐந்து வருடங்கள் பாலிவுட் உலகில் காதல் பறவைகளாக சுற்றித் திரிந்திருக்கின்றனர்.
என்னதான் கரிஷ்மாவிற்கு அபிஷேக்கைவிட இரண்டு வயது அதிகம் என்றாலும், இருவருடைய காதலும் பாலிவுட் திரை உலகையே மிரள வைத்தது.
இவ்வாறிருக்க திடீரென கரிஷ்மாவின் தாயான பபிதா கபூர் தான், அபிஷேக் பச்சனின் பொருளாதார நிலையை முன்வைத்து இவர்களுடைய திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.
ஏனெனில் கரிஷ்மா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போது தான் அபிஷேக் தன்னுடைய கேரியரையே ஸ்டார்ட் செய்தாராம். இதனால் கரிஷ்மாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தாராம் பபிதா கபூர்.
இதனைத் தொடர்ந்து தான் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு சில காலத்திலேயே அவரை விட்டு பிரிந்து தற்போது தனியாக அவருடைய மகளையும் மகனையும் வளர்த்து வருகிறாராம்.

abi
இவ்வாறு கரிஷ்மாவின் அம்மாவால் அவருடைய தலை எழுத்து தலைகீழாக மாறி இருக்கும் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
