Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர்தான்! கும்பிடு போட்டு வழியனுப்பும் ரசிகர்கள்!

aari-bigg-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர்தான்! கும்பிடு போட்டு வழியனுப்பும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மக்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. ஏனென்றால் அனுதினமும் புது உத்திகளை கையாண்டு தன்னுடைய சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறது பிக்பாஸ் 4 நிகழ்ச்சி.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் மக்கள் அளித்துள்ள ஓட்டுகளின் அடிப்படையில், போட்டியாளர்களில் ஒருவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது வழக்கம்.

அந்த வகையில், ஏற்கனவே க்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யார் வெளியேற போகிறார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது.

அந்தவகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஆரி, ஆஜித், ஷிவானி, அர்ச்சனா, அனிதா, சோம் சேகர், ரியோ ஆகியோரில் ஒருவரான சோம் சேகர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களே ‘பப்பட்’ என்று சோம்  சேகரின் சுவாரஸ்யம் குறைந்த போட்டியை கிண்டலடித்த சூழலில், பிக்பாஸ் ரசிகர்களின் மனதையும் கவரத் தவறிவிட்டார்.

மேலும் இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலேயே கடந்த வாரம்தான் டபுள் எவிக்சன்  நடைபெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்தார் பிக்பாஸ்.

som-cinemapettai

ஏற்கனவே அர்ச்சனா அண்ட் கோ-வில்  ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகிய இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரமும் அர்ச்சனா குரூப்பிசத்திலிருந்து ஆட்கள் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.

எனவே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் யார் வெளியே செல்ல போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top