பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகம் என இரண்டுமே செம்ம ஹிட் அடித்துவிட்டது. இந்த இரண்டு பாகம் சேர்த்து ரூ 2000 கோடி வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் உற்று கவணித்தால் ஒவ்வொருவரும் தலையில் வைத்திருக்கும் பொட்டு வித்தியாசமாக இருக்கும். இதில் ரம்யா கிருஷ்ணன் முழு நிலவு போல் பொட்டு வைத்திருப்பார்.

அதிகம் படித்தவை:  டிசைனர் சேலையில் ரெஜினா காசான்றா. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள். போட்டோ உள்ளே.

அதன் அர்த்தம் அவர் சாந்தமானவர், அதே நேரம் சமத்துவம், தைரியம், அக்கறை ஆகியவற்றை குறிக்குமாம்.

பாகுபலி நெற்றியில் அரை நிலவு போல் பொட்டு இருக்கும், இவை பல மதங்களின் ஒற்றுமை, இரக்கக்குணம், போராடும் மனம் ஆகியவற்றை குறிக்கின்றது.

அனுஷ்கா நெற்றியில் இருக்கும் பொட்டு ஆண்-பெண் இருவருமே சமம் என்பதை உணர்த்தும், கட்டப்பா நெற்றியில் இருக்கும் பொட்டு விசுவாசம் மற்றும் உதவியற்ற நிலையை குறிக்கும்.

அதிகம் படித்தவை:  ஜெர்மனியில் ஏரோ மாடலிங் தொழில்நுட்பம் சம்பந்தமான ஆரய்ச்சியில் தல அஜித்.   லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

நாசர் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் வஞ்சகத்தன்மையில் வெளிப்பாடாக காட்டியுள்ளார்கள். ராணா நெற்றியில் சூரியன் போன்று ஒரு பொட்டு இருக்கும்.

இவை எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தன்நிலை மாறாமல் இருப்பதை குறிப்பதாகும், இப்படி ஒரு பொட்டிலேயே கதாபாத்திரத்தை உருவாக்கிய ராஜமௌலி கிரேட் தானே.