fbpx
Connect with us

அர்ச்சனாவின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய நெட்டிசன்கள்.. அந்த பதவிக்கு நீங்க வொர்த் இல்லயாம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அர்ச்சனாவின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய நெட்டிசன்கள்.. அந்த பதவிக்கு நீங்க வொர்த் இல்லயாம்!

விஜய் டிவியை தூக்கி நிறுத்தும் தூணாக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் அனுதினமும் ஒரு புது திருப்பம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று அர்ச்சனா தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி காட்டியிருப்பது ரசிகர்கள் அனைவரையும் ஷாக்காகி உள்ளது.

அதாவது நேற்று ரியோ, நிஷா, சோம் ஆகிய மூவரிடமும், ‘இந்த வீட்டில் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தான் நான் கேட்பேன். மற்ற யாரை பற்றியும் எனக்கு கவலை இல்லை’ என்று கூறியிருக்கிறார் அர்ச்சனா.

ஏனெனில் நேற்று கமல் அர்ச்சனாவை ‘நடுவர் வேலை பாக்காதீங்க’ என்று வெளுத்து வாங்கினார்.

இந்த நிலையில் தற்போது 17ஆவது கன்டஸ்டன்ட் ஆக களமிறங்கிய அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை சிறிதுசிறிதாக பிரிக்க தொடங்கி இருக்கிறாரோ என்ற எண்ணம் பிக்பாஸ் ரசிகர்களிடையே தோன்ற துவங்கியுள்ளது.

மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வீட்டின் தலைவராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ‘இப்போதான் அர்ச்சனாவை  விஜய் டிவி எதுக்கு இறங்கி இருக்காங்கன்னு புரியுது’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Continue Reading
To Top