Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெறும் 6 ஓட்டு வித்தியாசத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபலம்.. கும்மாளம் போடும் ரசிகர்கள்!
Published on
பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு நபர் பிக்பாஸ் வீட்டைவிட்டு ரசிகர்கள் போடும் ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.
அந்தவகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் சம்யுக்தா என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சம்யுக்தாவிற்கும் சனம் செட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோருக்கும் நூறு ஓட்டு வித்தியாசம் தான் உள்ளதாம்.
ஆகவே சம்யுக்தா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபராக இருப்பார்.
பெரும்பாலும் சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ் ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

bb4-cinemapettai
எனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் யார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
