செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போச்சே நயன்.. குற்றச்சாட்டுக்கு தனுஷின் ரியாக்ஷன் இது தான்

Dhanush: திடுதிப்புன்னு நயன்தாராவிடம் இருந்து மூன்று பக்க அறிக்கை வந்ததும் ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பானது. அதிலும் தனுஷை அவர் கீழ்த்தரமானவர். அப்பா அண்ணன் தயவால் முன்னுக்கு வந்தவர் என சரமாரியாக அவதூறு பேசி இருந்தார்.

தனுஷை வெறுப்பவர்களுக்கே கூட இது அதிகப்படியாக தோன்றியது. அது மட்டும் இன்றி நயன்தாரா என்ன யோக்கியமா? தனுஷ் மீது இப்படி சேற்றை வாரி இறைப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என ரசிகர்களும் அவரை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

அதேபோல் சினிமா விமர்சகர்கள் பலரும் தனுசுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதன் மூலம் நயன்தாரா இதற்கு முன் தன்னுடைய அதிகார பலத்தை வைத்து என்னென்ன வேலைகளை பார்த்தார் என்ற விஷயமும் அம்பலமாகி வருகிறது.

இப்படியாக நயன்தாரா செய்த ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போய்விட்டது. அது மட்டும் இன்றி இவ்வளவு அலப்பறைகளுக்கு நடுவில் தனுஷ் அதற்கான எந்த ஒரு தன்னிலை விளக்கமும் கொடுக்கவில்லை.

நயன்தாரா குற்றச்சாட்டுக்கு தனுஷின் ரியாக்சன்

அதற்கு மாறாக இந்த விஷயத்தை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார். எப்படி என்றால் தன்னுடைய வேலையை மட்டுமே பார்ப்பது இது போன்ற விஷயங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை செலவழிக்கும் அளவுக்கு அவர் வேலையில்லாமல் இல்லை.

ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் விரைவில் வெளியாக இருக்கும் விடுதலை 2 படத்திலும் அவர் பாடியிருக்கிறார். இப்படி அவர் எப்போதுமே தன்னை பிசியாக தான் வைத்துள்ளார். அதனால் இதற்கு அவர் பதில் அளிக்க மாட்டார்.

அதற்கான அவசியமும் கிடையாது. உண்மை எப்படி இருந்தாலும் வந்து தான் ஆக வேண்டும். ஆனால் நயன்தாரா ஆடு தானே வந்து தலையை கொடுத்தது போல் தன்னுடைய இமேஜ் டேமேஜ் செய்து இருக்கிறார்.

இதுதான் தனுஷுக்கு ஆதரவாக தற்போது மீடியாவில் பரவி வரும் கருத்துக்கள். மேலும் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் டெக்னீசியன் ரைட்டர் டைரக்டர் என பன்முகப் திறமையோடு இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு என அவர் தன்னை நிரூபித்து வருகிறார் என ரசிகர்கள் புகழாரம் சூடி வருகின்றனர்.

- Advertisement -

Trending News