புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்.. தவெகவினர் கொண்டாட்டம்.. அப்போ வெற்றி உறுதி?

சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலித்த விஜய் கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை அறிவித்து ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதன்படி, அக்கட்சியில் கொடியும், கொடிப்பாடலும் வெளியானது.

இதைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். காசு திரட்டாமல் எப்படி இத்தனை லட்சம் மா நாட்டில் குவிந்ததாக திராவிட கட்சிகள் பேசும்படி அமைந்தது அந்த மாநாடு.

கட்சியைத் தொடங்கி, மாநாட்டில் சிக்சர் அடித்து, அடுத்த தேர்தலுக்குள் தன் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜய் திட்டமிருக்கும் நிலையில், விரைவில் தமிழ் நாடு முழுவதும் விஜய் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே தவெகவின் செயல்பாடுகள் அடுத்து என்ன என கணிக்க முடியாதபடி விஜய் பலவற்றை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

அதன்படி, திமுக ஊழல் பட்டியலை விஜய் வெளியிடப்போகிறார் என தகவல் வெளியான நிலையில், நேற்று, மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை என அரசை குற்றம்சாட்டினார். ஏற்கனவே மா நாட்டில் திமுகவை வசைபாடிய விஜய், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் களமிறங்கியதாக மற்ற கட்சிகள் கூறிவருகின்றன.

2026 – தேர்தலில் எந்த தொகுதியில் விஜய் போட்டி?

இந்த நிலையில் வரும் தேர்தல் முதல்வராகும் கனவுடன் இருக்கும் விஜய், முழு அரசியல்வாதியாக தன்னை செதுக்கி வருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஏற்ற தொகுதி என பார்த்து ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவர்.

அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்லில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நாகப்பட்டினம் அவரது முதன்மை விருப்பம் எனவும், அடுத்தடுத்த இடங்களில், அரியலூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

- Advertisement -

Trending News