தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது, இதில் விஜய் மட்டுமின்றி எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், காஜல், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.mersal audio teaser 1

இப்படத்தை தமிழகத்தில் தேனாண்டாள் நிறுவனமே வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் எப்படியும் ரூ 75 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்கள்.

அப்படி இது சாத்தியமானால் கபாலியை மிஞ்சும் வியாபாரம் மெர்சல் தான், இதைக்கண்ட பலரும் கோலிவுட்டில் அதிர்ந்துள்ளனர்.