இணையத்தில் வைரலான கவர்ச்சி புகைப்படத்தில் இருந்தது நிவேதா பெத்துராஜ் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மதுரையில் பிறந்தாலும் சிறு வயதிலேயே மும்பையில் செட்டில் ஆனவர் நிவேதா பெத்துராஜ். அலட்டல் இல்லாத அவரது நடிப்பு, மேக்கப் போடவில்லை என்றாலும் கவரும் முகம் என நடிப்பில் அடியெடுத்து வைத்தவருக்கு தற்போது ரசிகர்கள் ஏராளம். ஒரு நாள் குத்து படத்தில் மதுரை பொண்ணு என்ற அடையாளத்துடன் அறிமுகமாகியவரை தூக்கி வைத்து கொண்டாடினர் தமிழ் ரசிகர்கள். அதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படம் என இரண்டே படங்கள் தான் நிவேதா நடித்திருக்கிறார். ஆனால், தற்போதே கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி விட்டார். வெங்கட் பிரபுவின் பார்ட்டி, ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், ஜகஜால கில்லாடி என ஏகப்பட்ட படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.

இருதினங்களுக்கு முன்னதாக நிவேதா பெத்துராஜ் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளதாக பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலானது. அட நம்ம மதுர பொண்ணா இப்படி என ரசிகர்களுக்கு ஷாக் அடித்தது.

இந்நிலையில், வைரலான புகைப்படத்தில் இருப்பது நிவேதா இல்லையாம். அது வர்ஷினி பாகல் என்ற மாடல் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது. இதை அப்புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர் பிரஷுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். இருவரின் முக ஜாடையும் ஒன்று போல இருப்பதாலே ரசிகர்கள் இப்படத்தை வைரலாக்கி இருக்கிறார்கள்.