fbpx
Connect with us

இது ஒன்னும் பார்ட்டி மாதிரி ‘சில்லி’ படம் இல்லை..! வெங்கட் பிரபு மீது பிரபல இயக்குனர் ஆவேசம்.!

News / செய்திகள்

இது ஒன்னும் பார்ட்டி மாதிரி ‘சில்லி’ படம் இல்லை..! வெங்கட் பிரபு மீது பிரபல இயக்குனர் ஆவேசம்.!

‘தமிழ்ப் படம்’ இயக்குனர் சி.எஸ். அமுதன், ட்விட்டரில் செம ஆக்டிவாக இருப்பார். தற்போது அவர், ரெண்டாவது படம், மற்றும் ‘தமிழ்ப் படம் 2.0’ என இரண்டு படங்களில் ஈடுபட்டுள்ளார்.

ரெண்டாவது படம் பல வருடங்களாக மேக்கிங்கில் உள்ளது. விமல், அரவிந்த் ஆகாஷ், விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்த இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியே 4 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், தமிழ்ப் படம் 2.0 படத்தின் வேலைகள் துவங்கியுள்ளன.

tamil-padam

திடீரென நடிகர் சிவா நேற்று தனது ட்விட்டர் கணக்கில் இருந்து, “உங்களை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். முடியவில்லை. எனக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் லீ-க்கும் இன்னிக்கு லீவு வேண்டும்” என அமுதனுக்கு ட்வீட் செய்தார்.

அதற்கு “நான் பல்கேரியாவில் லொகேஷன் ஹன்ட் செய்து வருகிறேன். லீவெல்லாம் கொடுக்க முடியாது. டான்ஸ் வர்க்ஷாப் தொடர வேண்டும்” என அமுதன் பதிலளித்தார்.

cs-amudhan

ஏற்கனவே, சிவா டான்ஸ் ஆடுவது போல தமிழ் படத்தில் காமெடி செய்திருப்பார்கள். தற்போது படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டரில் இப்படி டான்ஸ் க்ளாஸ் என்றெல்லாம் புது யுக்தியை கையாளுகிறார்கள் போல என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அடிக்கத் துவங்கினர்.

அதற்குள், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், வெங்கட் பிரபு என இந்த ட்விட்டர் சண்டை/ ப்ரோமோஷன் பெரிதானது.

“சிவா போன்ற ஒரு கலைஞனுக்கு பிரேக் கொடுக்க வேண்டும்” என கல்யாண் அவருக்கு ஆதரவளிக்க, “இது ஒன்னும் பார்ட்டி மாதிரி ‘சில்லி’ படம் இல்லை.

Venkat-Prabhu

சீரியசான படம்” என்றார் அமுதன். அதற்க்குள் பார்ட்டி படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நுழைந்து, “முதல்ல ரெண்டாவது படத்தை ரிலீஸ் பண்ணுங்க” என கவுண்டர் கொடுக்க, “ரிலீஸ் பண்ணலாம் சார். என்று கூற அதற்கு வெங்கட் பிரபு ‘முதலில் டைட்டிலை காப்பியடிக்காம இருங்க’ என்று கிண்டல் செய்தார்.

ஆனா ஒரு ராசியில்லாத நடிகர நடிக்க வச்சதுனால படம் இப்பிடி நிக்குது” என வெங்கட் பிரபுவின் போட்டோவை காட்டி அமுதன் கலாய்த்தார்.

இப்பிடியே இருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு செல்ல, நெட்டிசன்கள் இவர்கள் உண்மையிலேயே சண்டை போடுகிறார்களா, அல்லது படத்தை ப்ரமோட் செய்ய இப்படி செய்கிறார்களா என குழம்பிப் பொய் இருக்கிறார்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top