Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட இது சும்மா கயிறு தான்ப்பா.. புல்ஸ்டாப் போட்ட விஜய் நடிகை
திருமணம் செய்து கொண்டார் என சமூக வலைத்தளத்தில் பரவிய வதந்திகளுக்கு ஒரே பதில் மூலம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
உலக அழகியாக 2000ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. நாயகியாக அவர் முதல் அவதாரம் எடுத்தது என்னவோ விஜயின் தமிழன் படத்தில் தான். ஆனால் அதை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2003ம் ஆண்டு அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை படத்தில் தனது பாலிவுட் அவதாரத்தை எடுத்தார். தொடர்ந்து, பல படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது, கேரியர் கிராப்பில் அடுத்த படியை எடுத்து வைத்து இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற சீரியலான குவாண்டிகோவின் மூன்றாவது சீசனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில், படப்பிடிப்பில் கால் தவறி விழுந்த ப்ரியங்கா நடிப்பில் இருந்து சிறிது ஓய்வு எடுத்து இருக்கிறார்.
இந்நிலையில், ஓய்வில் இருப்பதால் இந்தியாவிற்கு வந்துள்ளார் ப்ரியங்கா. அஸ்ஸாம் சென்ற ப்ரியங்கா தனி விமானத்தில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். சும்மா இருப்பாங்களா? அப்படத்தில் கையில் இருந்த ஒரு கை செயினை பார்த்த ரசிகர்கள் ப்ரியங்காவிற்கு ரகசிய திருமணம் நடைபெற்று விட்டதாக நெட்டிசன்கள் கிசுகிசுத்தனர். சமூக வலைத்தளத்தில் நேற்று வரை இதே ஹாட் டாப்பிக்காக இருந்தது. போதுமப்பா என்ற ரீதியில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா, மோசமான பார்வை உடையவர்கள். அது தாலியெல்லாம் இல்லை. வெறும் தீய சக்தியை அழிக்கும் கயிறு தான். எனக்கு திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக சொல்வேன். சீக்ரெட்டாகலாம் வைக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
