Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிக்கும் ரெஜினாவிற்கு இதான் முதல் முறை…

மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் முதல் முறையாக நடிகை ரெஜினா தன் சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார்.

Regina-Cassandra

பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார் ரெஜினா கசாண்ட்ரா. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து, தெலுங்கு படத்தில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது, தமிழில் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடித்து இருக்கிறார். திரு இயக்கத்தில் தனஜெயன் கோவிந்த் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் முதல்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்து இருக்கிறார்கள். வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஏப்ரல் மாதமே இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், ரஜினி நடிப்பில் காலா படத்தின் வெளியீடு காரணமாக படத்தை தயாரிப்பாளர் தள்ளி வைத்தார். தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரிய திட்ட அறிக்கை சமர்பிக்க வேண்டிய மே 3க்கு பிறகே படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, இப்படத்தை விரைவில் வெளியிட தணிக்கை குழுவிற்கு அனுப்ப படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறது.

Regina-Cassandra

இந்நிலையில், இப்படத்திற்கு ரெஜினா முதல் முறையாக தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். தமிழ் நன்கு தெரிந்தாலும், இதுவரை அவர் நடித்த படத்தில் டப்பிங் பேசியதே இல்லையாம். இந்த அனுபவம் நன்றாக இருக்கிறது என்றும், இனி எல்லா படங்களிலும் தானே டப்பிங் பேசி விடுவேன் எனவும் ரெஜினா தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top