நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என இரு பதவிகளில் இருந்து கடமைகள் ஆற்றிவருகிறார்.

இதில் சமீபத்தில் தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட பூமி பூஜை மிக கோலாகலமாக நடத்தப்பட்டது. பல முக்கிய பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர்.

தற்போது பழைய பில்டிங்கை இடித்து புதிய கட்டடப்பணிகளுக்கான வேலை விருவிருப்பாக நடந்துவருகிறது. இதனால் கட்டத்தில் அருகிலுள்ள பொது சாலையை பயன்படுத்தியுள்ளார்கள்.

இது மக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் உயர் நீதிமன்றம் கட்டடம் கட்ட இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் அஸ்திவார பணிகளை தொடரலாம் என கூறியுள்ளது.

மேலும் சாலையை பயன்படுத்தி சாலையை கட்ட காரணம் என்ன என விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.