தானே மாவட்டத்தில் முறுக்கினை திருடி தின்ற சிறுவர்களை கடை உரிமையாளர் கொடுமையாக தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே அருகிலுள்ள உல்லாஸ்நகர் பிரேம் தேக்டி பகுதியில் மெகமூத் பதான் (65) என்பவர் கடை வைத்துள்ளார்.

அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள், முறுக்கினை எடுத்து சாப்பிட்டுள்ளார்கள். அதனைப்பார்த்த பதான், அந்த சிறுவர்களிடம் சாப்பிட்ட முறுக்குக்கு காசு கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஜி.வி.பிரகாஷ்க்கு சோதனை மேல் சோதனை

ஆனால், அந்த சிறுவர்களிடம் காசு இல்லை. இதனால் கோபமடைந்த மெகமூத் தனது மகன்களை அழைத்தார். இரண்டு சிறுவர்களின் தலைமுடிகளை மொட்டை அடித்து, உடைகளை கழற்றி செருப்பு மாலை அணிவித்து தெருவில் ஊர்வலம் அழைத்து சென்றுள்ளார்.

அதிகம் படித்தவை:  தங்க மீன்கள் பாணியில் சென்டிமென்ட் ஆன இயக்குனர் செல்வராகவன்.

அதை வீடியோவாக எடுத்து அந்த பகுதியிலுள்ள குரூப்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவர்கள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களது பெற்றோர், உல்லாஸ்நகர் பொலிசில் புகார் செய்தனர். இதையடுத்து சிறுவர்களை கொடுமைப்படுத்திய அவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.