fbpx
Connect with us

Cinemapettai

எங்க வீட்டு மாப்பிள்ளையில் இதுவும் நடந்தது.. அதனால் தான் திருமணத்தை நிறுத்தினேன்…ஆர்யா பகீர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எங்க வீட்டு மாப்பிள்ளையில் இதுவும் நடந்தது.. அதனால் தான் திருமணத்தை நிறுத்தினேன்…ஆர்யா பகீர்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கேமராவிற்கு பின்னால் நடந்த சில விஷயங்களால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என ஆர்யா கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களால் புது புது ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறது. கடந்த வருடம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்தி சேனல்களில் கிட்டத்தட்ட 10 சீசன்கள் கடந்துவிட்ட நிலையில், முதன்முறையாக தமிழில் விஜய் டிவியின் அந்த ஷோ ஒளிபரப்பானது. 15-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில், எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் இருப்பது போன்ற கான்சப்டுடன் வடிவமைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, சின்னத்திரை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஓவியா, கஞ்சா கருப்பு, சக்தி, காயத்ரி ரகுராம், ஹாரத்தி என பிரபலங்கள் வரிசைகட்டினாலும், பிக்பாஸ் முதல் சீசன் டைட்டிலை ஆரவ் தட்டிச் சென்றார். முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசனுக்கான வேலைகளில் சேனல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது, பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெறப்போகும் பிரபலங்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோல், சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் சேனலில் நடிகர் ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளானது. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி அந்த கால சுயம்வரம் போன்ற கான்செப்டை அடிப்படையாகக் கொண்டது. அந்த நிகழ்ச்சி மூலம் ஆர்யாவுக்குப் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் பேச்சிலராக இருந்த ஆர்யா, அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

இதில், 16 பெண்கள் கலந்துகொண்டனர். டேட்டிங், போட்டிகள் என கலகலப்பாகப் போய்க்கொண்டிருந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 3 பெண்கள் தேர்வாகினர். இறுதிப் போட்டியின் முடிவில் அவர்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அந்த 3 பெண்களின் வீடுகளுக்கு ஆர்யா விசிட் அடித்தார். ஏறக்குறைய ஒரு மாப்பிள்ளைக்குக் கொடுக்கப்படும் வரவேற்பு அவருக்கு அந்த வீடுகளில் அளிக்கப்பட்டது. பிரமாண்டமான மேடையில் நடந்த இறுதிச் சுற்றின் முடிவில், நான் யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. எனவே, யாரையும் திருமணம் செய்துகொள்ளப் போவதுமில்லை என்று அறிவித்தார்.

இது போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த செயலுக்காக நடிகர் ஆர்யா சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்தநிலையில், தான் யாரையும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்று அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். `எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் போது கேமராவுக்கு முன்னால் நடந்த விஷயங்கள்தான் உங்களுக்குத் தெரியும். கேமராவுக்குப் பின்னால் நடந்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களை வைச்சுத்தான் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுனு முடிவெடுத்தேன். இது மற்ற டி.வி.நிகழ்ச்சிகளை போலல்லாமல், எனது சொந்த வாழ்க்கையைப் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் அந்த நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்தேன்’ என்று செண்டிமெண்டாகப் பேசியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top