பாண்டியன் கொட்டத்தை அடக்க சரியான ஆளு இந்த மருமகள் தான்.. தங்கமயில் போடப்போகும் டிராமா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி டியூஷன் எடுப்பது இந்த அளவிற்கு ஒரு பிரச்சினையாக வெடிக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதுவும் யார் கண்ணில் சிக்கினால் பாண்டியனுக்கு அவமானமும் ராஜிக்கு பிரச்சினை வரும் என்று தெரிந்தே சக்திவேல் பார்த்துவிட்டு மிகப்பெரிய சண்டையை மூட்டி விட்டார்.

இதுவரை தன்மானத்துடன் யாரையும் நம்பி இல்லாமல் சொந்தமாக முன்னேறி வாழ்ந்து காட்டிய பாண்டியனுக்கு ராஜி மூலம் மிகப்பெரிய அவமானம் கிடைத்து விட்டதாக உணர்கிறார். இதற்கு உறுதுணையாக இருந்து ராஜிக்கு உதவி செய்தது மீனாதான் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் இவர்களை வெறுக்கும் அளவிற்கு கோபத்தை காட்டி வருகிறார்கள்.

சைடு கேப்பில் கிடா வெட்டும் பாண்டியன் மருமகள்

போதாதருக்கு ராஜியை கதிர் ரொம்பவே திட்டி பாண்டியன் பட்ட அவமானத்திற்கு காரணம் முழுக்க முழுக்க ராஜி மட்டுமே என நினைத்து ஓவராக பேசி விடுகிறார். இதனால் ராஜி என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்காத அளவிற்கு கதிர் மோசமாக நடந்து கொண்டார். அத்துடன் செந்தில், மீனா என்ன காரணத்திற்காக அந்த மாதிரி ஒரு உதவியை செய்தார் என்பதை கேட்க விருப்பம் இல்லாமல் கோபப்பட்டு விட்டார்.

இப்படி அனைவரும் கோவமாக இருப்பதால் ராஜி மற்றும் மீனா என்ன செய்வது என்று தெரியாமல் துவண்டு போய் இருக்கிறார்கள். அதே மாதிரி பாண்டியனும் அவமானப்பட்டதை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார். அந்த நேரத்தில் சரவணன், பாண்டியனுக்கு போன் பண்ணி நாங்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டோம் இப்போ கிளம்பி விடுவோம் என்று தகவலை சொல்கிறார்.

அதற்கு பாண்டியன் சாதாரணமாக பேசாமல் வருத்தத்துடன் பேசுவது போல் சரவணன் நினைக்கிறார். அதற்காக என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் பாண்டியன் போன் கட் பண்ணி விடுகிறார். உடனே சரவணன், கோமதிக்கு போன் பண்ணி விசாரிக்கிறார். ஆனால் நடந்து விஷயத்தை சொல்லாமல் அனைவரும் மறைத்து விடுகிறார்கள்.

பிறகு வீட்டிற்கு வந்த பொழுது தான் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு விஷயங்கள் தெரிய வரப்போகிறது. உடனே இதுதான் சான்ஸ் என்று பாக்கியம் கொளுத்தி போடும்போது தங்கமயில் ஓவர் டிராமாவை போட்டு நான்தான் இந்த குடும்பத்திற்கு ஏற்ற நல்ல மருமகள் என்பது போல் பாண்டியன் மற்றும் அனைவரிடமும் ஒரு பெயரை எடுத்து விடுவார். ஆனால் போக போக தான் தங்கமயிலா அல்லது பித்தளை மயிலா என்று தெரிய வரும்.

அதுவரை பாண்டியனின் கொட்டத்தை அடக்க சரியான ஆளாக இந்த தங்கமயிலின் ஆட்டம் நடந்து கொண்டே தான் இருக்கும். இதுல வேற இன்னும் கதிர் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்துவிட்டால் அப்பொழுது பாண்டியனின் ஆட்டம் ருத்ரதாண்டவம் ஆக இருக்கும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவம்

Next Story

- Advertisement -