Connect with us
Cinemapettai

Cinemapettai

kajal-agarwal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தக் கலரில் வந்தால் படம் சூப்பர் ஹிட். அப்போ எல்லா படமும் ஹிட்டாயிருக்க வேண்டுமே!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி  போன்ற பல வெற்றிப் படங்களில் இவர் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர வெப் சீரிஸ் மற்றும் விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சில சென்டிமெண்ட்களை  நம்புகிறார். அதாவது காஜல் அகர்வால் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அதன் முதல் காட்சியில் வெள்ளை நிற ஆடை அணிந்து இருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றியடையும் என்பது தான்.

இது பல படங்களில் வொர்க் அவுட் ஆகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி போன்ற திரைப்படங்களில் அவர் வெள்ளை உடை அணிந்து தான் நடித்து இருந்தாராம்.

இது தவிர தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற மகதீரா மற்றும் இந்தியில் வெளியான சிங்கம் திரைப்படம் போன்றவற்றிலும் அவர் வெள்ளை உடை அணிந்து நடித்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனால் காஜல் அகர்வால் வெள்ளை ஆடை தனக்கு ராசியானது மற்றும் அதிர்ஷ்டமானது என்று நம்புகிறார். அதனால் இந்த வெள்ளை உடை சென்டிமென்டை அவர் நடிக்கும் பல திரைப்படங்களுக்கும் பயன்படுத்துகிறாராம்.

இதே போன்று தமிழில் இயக்குனர் ஹரி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் தங்கள் திரைப்படங்களில் சில சென்டிமென்ட் காட்சிகள் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அப்படம் வெற்றியடையும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

kajalagarwal

kajalagarwal

 

Continue Reading
To Top