நடிகையர் திலகம், தலைவி எல்லாம் சுத்த வேஸ்ட்.. தரமான பயோபிக் படம் இதுதான்

பயோபிக் படம் என்றாலே சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையை அப்படியே மக்களுக்கு எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தைரியமாக எடுத்துக் கூறுவதே ஆகும். ஆனால் சமீப காலமாக வெளிவரும் இது போன்ற படங்களில் எல்லாம் அந்த உண்மையை கூறுவதாக தெரியவில்லை.

அதுபோன்ற படங்களில் சில காட்சிகளை புகுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பல காட்சிகளில் இயக்குனரும், தயாரிப்பாளரும் சமரசம் செய்துகொண்டு உண்மையான நிகழ்வை காட்டுவது கிடையாது. இப்படி பயோபிக் படமாக வெளிவந்த நடிகையர் திலகம், தலைவி, த டர்ட்டி பிக்சர்ஸ் போன்ற திரைப்படங்களில் எல்லாம் இதுதான் நிகழ்ந்தது.

இந்தத் திரைப்படங்களில் எல்லாம் மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நடிகைகளின் வாழ்க்கையில் நடந்த பல மர்மங்களும் காட்டப்படாமல் போய்விட்டது. ஆனால் ஒரு பயோபிக் படம் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களையும் தத்ரூபமாக மக்களுக்கு காட்டியது.

சீமா பிஸ்வாஸ், நிர்மல் பாண்டே நடிப்பில் வெளிவந்த பண்டிட் குயின் என்ற திரைப்படம் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே மக்களுக்கு காட்டியது. சிறந்த பயோபிக் படம் இதுதான் என்று பலரும் கூறுகின்றனர். தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு ஆதரவாக பல சட்டங்களும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஆனால் 80 களின் தொடக்கத்தில் இது போன்ற சட்டங்கள் எதுவும் கிடையாது. அப்படி ஒரு காலகட்டத்தில் கூட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்தான் பூலான் தேவி. தனக்கு அநியாயம் செய்தவர்களுக்கு தக்க தண்டனையை தானே கொடுத்து பெண்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தவர்.

அன்றைய காலகட்டத்தில் இவருடைய தைரியத்தை பார்த்து பல சர்வதேசப் பத்திரிக்கைகளும் இவரை தூக்கிவைத்துக் கொண்டாடியது. இப்படிப்பட்டவரை பற்றிய பல உண்மைகளை மக்களுக்கு காட்டிய அந்த பயோபிக் படம் இன்றும் ஒரு சிறந்த திரைப்படமாக விளங்குகிறது.