fbpx
Connect with us

Cinemapettai

16 வருடங்களுக்குப் பிறகும் டிரெண்டான கில்லி.. அந்த விஜய்யை மிஸ் செய்கிறோம் என ரசிகர்கள் புலம்பல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

16 வருடங்களுக்குப் பிறகும் டிரெண்டான கில்லி.. அந்த விஜய்யை மிஸ் செய்கிறோம் என ரசிகர்கள் புலம்பல்

ஒரு சில ஹீரோக்கள் ஆயிரம் படங்களில் நடித்தாலும் அதில் காலம் தாண்டி பாராட்டப்படும் அளவுக்கு ஒரு சில படங்கள்தான் இருக்கும். அப்படி விஜய்க்கு அமைந்த படம் தான் கில்லி. தெலுங்கு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி பக்காவாக ரெடி செய்து பரிமாறி இருந்தார் இயக்குனர் தரணி.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்த விஜய் படங்கள் அனைத்துமே தற்போதும் டிவிகளில் ஒளிபரப்பாகும் போது ரசிகர்கள் தங்களது குடும்பத்தினருடன் இருந்த இடத்தைவிட்டு நகராமல் பார்க்கின்றனர். அதற்குக் காரணம் அப்போது இருந்த சுறுசுறுப்பும், மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த விஜய்யும் தற்போது மிஸ்ஸிங்.

விஜய்யின் போக்கிரி, கில்லி, வசீகரா, சச்சின் போன்ற படங்கள் எந்த ஒரு தனிமனித விஷயத்தையும் சொல்லாமல் முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் என்ற ஒரு வார்த்தையை மட்டுமே நம்பி எடுக்கப் படங்கள். அதனால்தான் இன்றும் பேசப்படுகின்றன.

இப்போதும் விஜய் கமர்ஷியல் ஹீரோ தான். ஆனால் ரசிகர்கள் இணையதளங்களில் அதிகம் பரிமாறிக்கொண்ட வார்த்தை, நாங்கள் கில்லி விஜய்யை பெரிதும் மிஸ் செய்கிறோம் என்று. வழக்கமான கமர்சியல் படங்களாக இருந்தாலும் சரியான கலவையில் கொடுக்கப்பட்டதால் அப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற்றன.

விஜய் தற்போது வரை கமர்சியல் படங்கள் மட்டும் தான் நடித்து வருகிறார். ஆனால் ரசிகர்கள் கில்லி விஜய்யை மிஸ் செய்கிறோம் என்று சொல்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம். கில்லி படத்திற்கு பிறகு விஜய்யின் கமர்ஷியல் படங்களாக வெளிவந்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற படங்கள்தான் பக்கா கமர்ஷியலாக வெளிவந்தது.

அதன் பிறகு வெளிவந்த குருவி, வேட்டைக்காரன், சுறா போன்ற படங்கள் விஜய்யின் எதிர்கால திட்டத்தை எதிர்நோக்கி மக்களை காப்பாற்றும் தலைவன் என அவரை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். இவை அனைத்துமே தோல்வி படங்கள். வேட்டைக்காரன் மட்டும் ஓரளவு வெற்றியை பெற்றது.

சரி, வேலாயுதம் படத்தில் விஜய் திருந்தி விட்டார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கி படங்களுக்குப் பிறகு தனது படங்களில் அரசியல் வசனங்கள் அதிகம் பேசி வந்தார் விஜய். இதனால் பல சிக்கல்களையும் மேற்கொண்டார். கில்லி திருப்பாச்சி போன்ற படங்களை இப்போதும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை விஜய் உணர்ந்தாலே போதும்.

அவரே அவருக்கு தெரியாமல் அரசியல் வட்டத்திற்குள் மாட்டிக் கொண்டார் என்று கூட சொல்லலாம். கில்லி, போக்கிரி மாதிரி மறுபடி ஒரு படம் பண்ணுங்க விஜய் சார். சத்தியமா சொல்றேன், செம்மையா அந்த விஜய்யை மிஸ் பண்றோம். பிகில் கூட ஸ்போர்ட்ஸ் படம்தான். ஆனால் கில்லி படத்தை ரசிக்க முடிந்த அளவுக்கு பிகில் படத்தை ரசிகர்களால் ஏற்க முடிந்ததா?

மற்ற ரசிகர்களும் விஜய்யை கொண்டாடிய படம் என்றால் அது கில்லி தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top