fbpx
Connect with us

Cinemapettai

அந்த படம் வரட்டும்.. அதுக்கப்புறம் என்னோட ரேஞ்சே வேற.. தயாரிப்பாளரை தெறிக்கவிட்ட அஜித்

ajith-old

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த படம் வரட்டும்.. அதுக்கப்புறம் என்னோட ரேஞ்சே வேற.. தயாரிப்பாளரை தெறிக்கவிட்ட அஜித்

தல அஜித் தமிழ் சினிமாவில் நிறைய தோல்விகளை சந்தித்து விடா முயற்சியால் தற்போது முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது தல அஜித் கடந்து வந்த பாதையை அவர் சொல்லி தெரியவில்லை என்றாலும் அவர் கூட பயணம் செய்து ஆட்கள் கூறும்போது அவர் மீதான மரியாதை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எழில் இயக்கத்தில் பிரபுதேவா சரத்குமார் நடிப்பில் உருவான படம் பெண்ணின் மனதை தொட்டு. இந்த படத்திற்கு முதன் முதலில் ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டவர் தல அஜித் தான். அப்பொழுது தயாரிப்பாளருடன் சம்பளப் பிரச்சினை காரணமாக தல அஜித் படத்திலிருந்து விலகினார்.

பிறகு எழில் தல அஜித் இடம் சென்று காரணம் கேட்டபோது இந்த படம் ரிலீஸான பிறகு என்னுடைய ரேஞ்சே வேறு என பயங்கர துணிச்சலோடு சொல்லி உள்ளாராம். அதுதான் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வாலி படம்.

அஜித் சொன்னதைப் போலவே வாலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த துணிச்சல் எழிலுக்கு பிடித்துப்போகவே தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் ராஜா என இரண்டு படங்களை அஜித்தை வைத்து இயக்கினார்.

பிறகு அந்த தயாரிப்பாளர் தல அஜித்தை வைத்து படம் பண்ண மிஸ் பண்ணி விட்டோமே என வருந்தியதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த துணிச்சலும் தன்னம்பிக்கையும் தான் தல அஜித்தை இந்த அளவு உயர்த்தி உள்ளது என அவரது ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டு கெத்தாக சுற்றி வருகின்றனர்.

தல தல தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top