fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் வைக்கப்போகும் கச்சேரி.. மாஸ் சம்பவம் இருக்கு

vijay-audio

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் வைக்கப்போகும் கச்சேரி.. மாஸ் சம்பவம் இருக்கு

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவையே உலுக்கிய சம்பவம் என்றால் அது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது தான். விஜய்யை தவிர மற்ற எந்த நடிகர் வீட்டில் இதுபோன்ற வருமான வரி சோதனை நடந்திருந்தாலும் இவ்வளவு பெரிய விவாதமாக மாறுமா என்பது சந்தேகம் தான்.

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் தொடர்புடைய நடிகர்கள் மற்றும் படத்தயாரிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பிகில் படத்துக்கு பைனான்ஸ் உதவி செய்த அன்புச்செழியன் வீட்டில் சுமார் 77 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத கருப்பு பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது.

பிகில் மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிவந்த தர்பார் படத்திற்கும் இவர்தான் பைனான்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விரண்டு படங்கள் மட்டுமல்லாது பல பெரிய படங்களுக்கும் தற்போது வரை பைனான்ஸ் உதவிகளை செய்து வருகிறார். விஜய் வீட்டில் இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்த வருமான வரி சோதனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. விஜய் அனைத்து வரிகளையும் சரியாக கட்டியதாகவும், அவரிடம் கருப்புபணம் போன்றவை எதுவும் இல்லை எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமான வரித் துறையிடம் இருந்து வெளியிடப்பட்டது.

ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் தளபதிக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்த நிலையில் இந்த வருமானவரி சம்பவம் அவர் மீதான மரியாதையை மேலும் கூட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது என்பதுதான் உண்மை. மேலும் இதில் படம் 300 கோடி வசூல் இல்லை, படம் ஃப்ளாப் என்று சொன்னவர்களுக்கு நெற்றிப்பொட்டில் அடித்தது போல் வருமான வரி அதிகாரிகள் உள்பட 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு விட்டனர்.

இதுவே தளபதி விஜய்யை பிடிக்காதவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. தற்போது சமூக வலைதளங்களில் விஜய்யை பிடிக்காதவர்கள் தளபதி விஜய் வருமான வரித் துறையினருக்கு காசு கொடுத்து வரிஏய்ப்பு செய்ததை மறைத்து விட்டதாக ஒரு கூட்டம் கதறிக் கொண்டு இருக்கிறது. இதுதான் தவறான விஷயம். மேலும் விஜய் மீது எந்த ஒரு குற்றங்களும் இல்லை என்றவுடன் தளபதி விஜய்யை பிடிக்காத கூட்டம் ஆழ்ந்த சோகத்தில் இறங்கியுள்ளது.

வருமான வரி சோதனையின்போது பிரபல அரசியல்வாதி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டிவியை வீசி சினிமாவில் அரசியல் செய்த வீரர் ஆயிற்றே. நேர்மை எங்கே? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வருமான வரித் துறையே பதில் சொல்லியிருக்கும் என நம்பலாம். தற்போது மொத்த பேரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாதான்.

இந்த வாட்டி குட்டிக்கதை பெரிய கதையா இருக்க வாய்ப்பு இருக்கு!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top