Connect with us
Cinemapettai

Cinemapettai

sundar-pitchai

India | இந்தியா

உலகமே வியந்து பார்க்கும் சுந்தர் பிச்சையின் 15 ஆண்டுகால வளர்ச்சி.. கூகுளின் நம்பர் ஒன் CEO – வாக மாறிய கதை

2005 ஆம் ஆண்டு கூகுளில் சாதாரண பணியாளராக களமிறங்கிய சுந்தர் பிச்சை, அடுத்த 15 ஆண்டுகளில் கூகுளின் தாயான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சிஇஓ ஆகிய செய்தி கேட்டு உலகமே வியப்பில் ஆழ்ந்து கிடக்கிறது.

மதுரை மண்ணின் மைந்தன் சுந்தர் பிச்சை, சில வருடங்களுக்கு முன்புதான் கூகுளின் சிஇஓ வாக பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கூகுளை அதிக லாபம் பெற செய்தார்.

இந்த உலகில் கூகுள் தான் பெரியது என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதன் தாயாக இருப்பது ஆல்ஃபபெட் நிறுவனம் தான் என்பதை சுந்தர் பிச்சை சிஇஓ ஆன பிறகுதான் இந்தியாவில் பல பேருக்கு தெரியும் என்பது உண்மை.

இதற்கு முன் ஆல்பபெட்-ன் சிஇஓ ஆக லாரி பேஜ் என்பவர் இருந்து வந்தார். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளதால் கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையை சிஇஓவாக மாற்றியுள்ளது. மேலும் அவருக்கு உறுதுணையாக லாரி பேஜ் மற்றும் இணை நிறுவனரான செர்ஜி பிரின் என்பவரும் பணியாற்றுவதாக கூகுள் நிறுவனம் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கு ட்விட்டரில் தனது நன்றியை சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top