Tamil Cinema News | சினிமா செய்திகள்
18 வயதிலேயே கில்மா படம் பார்த்ததை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை.. எப்படி தெரியுமா?
செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கி, சீரியலில் நுழைந்து மக்கள் மனதை கொள்ளையடித்து, தற்போது சினிமாவில் உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் நடிகை தான் பிரியா பவானி சங்கர். அவர் கல்லூரி வயதில் ஆபாச படம் பார்த்த அனுபவங்களை ஒரு யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது :
தன்னுடைய 18-ஆவது பிறந்த நாளன்று தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சீனியர் அக்கா ஒருவர், தான் வயதுக்கு வந்துவிட்டதாகவும், இனி அனைத்து விஷயங்களையும் நீ தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறி கல்லூரி விடுதியில் இரவு தூங்கும் நேரத்தில் தனக்கு ஆபாச படத்தை காட்டியதாக கூறியுள்ளார்.
பிரியா பவானி சங்கரை குடும்ப குத்துவிளக்காக பார்த்து ரசித்த ரசிகர்கள் இந்தப் பேட்டிக்கு பிறகு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர வர யூடியூப் சேனல்கள் எல்லை மீறி செல்கின்றன என்பதற்கு இதுபோன்ற கேள்விகளே சான்று என்று ஒரு தரப்பு கருத்துக் கூறி வருகிறது.
தற்போது பிரியா பவானி சங்கர் அருண் விஜய்யுடன் மாபியா என்ற படத்திலும், பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
